நானிலம் தேடி

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். “நானிலம் தேடி” என்று பெயரிடப்பட்டுள்ள எனது நாவல் “யாப்பு வெளியீடு” என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் விளம்பரப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

கண்ணகி சாபம் விட்டதால் மதுரை எரிந்தது. அறம் தவறிவிட்டோமென்று உணர்ந்த மறுநொடி உயிரை விட்டார் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அவர் மனைவி கோப்பெருந்தேவியும் அவருடனே இறந்து போனார். அப்போது கொற்கையில் ஆட்சி செய்தவர் வெற்றிவேல் செழியன். கண்ணகியின் சாபத்தைப்போக்க வெற்றிவேல் செழியன் என்ன செய்தார் என்பதை அடித்தளமாக வைத்து எழுத்துப்பட்ட சமகால கதைதான் இந்தப்  புதினம்.

புதினம் என்ற வரையறையை மீறாமல், ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற விறுவிறுப்பை எழுத்தில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்ட புத்தகம். இந்த புதினத்தின் நிறைகுறைகளைத் தாண்டி, இன்றைய தலைமுறையினருக்கு சிலப்பதிகாரம் போன்ற தமிழ் காப்பியங்கள் மீது ஆர்வத்தைத் தூண்ட வேண்டுமென்பது இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கம். யார் இந்த கண்ணகி? என்று இன்றைய தலைமுறையினரை இணையத்தில் தேட வைத்தால் அதுவே இந்த நூலின் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்