தமிழாசிரியர்களுக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய பல இணையதளங்கள் இருந்தாலும், தமிழாசிரியர்களுக்கு ஏன் ஒரு இணையதளம் தேவைப்படுகிறது? தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும், தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உலகம் முழுவதிலும் கிடைக்குமென்று சொல்லிவிட முடியாது. தமிழ் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத நாட்டில் வாழும் ஒருவர், தமது குழந்தைக்குத் தமிழ்க் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை எவ்வாறு தேடுவது என்ற கேள்விக்கான விடைதான் இந்த இணையதளம். உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியரோ அல்லது தமிழ்க் கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டில் வாழும் தமிழருக்கோ, இந்த இணையதளத்தை நீங்கள் பரிந்துரைக்கலாம்.