என்று மணிப்பிரவாளம் என்ற மொழிநடை மழுங்கடிக்கப்பட்டு தனித்தமிழ் இயக்கம் துளிருற்றதோ என்ற தமிழ்த்தேசிய உணர்வும் ஆழமாக வேரூன்றி விட்டது. தமிழ்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தயவால் தமிழ்த்தேசியம் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மத்தியில் வெற்றிகரமாக கொண்டுசேர்க்கப்பட்டது.
தமிழர்கள் என்ற போர்வையில் திராவிட கட்சிகளே மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றனர். திராவிடம் என்பது போலிச்சித்தாந்தம் என்று தமிழர்கள் உணர்ந்து கொண்டனர். இனி தமிழ்தேசியக் கட்சிகளுக்கு ஏறுமுகம்தான். இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் தமிழர் போன்ற தமிழ்தேசியக் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாக்கு செலுத்த வேண்டும்.
இன்றைய சூழலில் தமிழ்த்தேசியம் பேசும் கட்சி நாம் தமிழர் மட்டுமே. தமிழர்கள் பலரும் அரசியல் கட்சித் தலைவர்களாக இருந்தாலும், அவர்களும் திராவிட மாயையில் சிக்கிக்கொண்டவர்களாவே இருக்கிறார்கள். திராவிடத்தை வேரறுக்கும் முயற்சியில் முன்னணியில் இருப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே. இந்த ஒற்றைக் காரணமே போதும் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த. அது மட்டுமல்ல, நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. என்னென்ன காரணங்களென்று விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் (youtube.com)