ஒட்டுமொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்ட மௌரியப் பேரரசு, தமிழ்நாட்டின் மீது மட்டும் படையெடுக்கத் துணியவேயில்லை. அதன் காரணம், தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் மீதான அச்சம். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு கிடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், மாற்று மொழி பேசுபவர்கள் நம் நாட்டை ஆட்சி செய்வதுதான். ஆனால் அதைவிட முக்கிய காரணம், தமிழர்களிடையே நிலவும் அறியாமை. யார் ஆண்டால் எனக்கென்ன என்ற அடிமை மனநிலை. தமிழ்நாட்டைத் தமிழன் ஆள்வது ஒரு அடிப்படை உணர்வுகூட இல்லாமல் பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காணொளி.