பட்டத்து யானையின் எடைக்குத் தங்கம் | தமிழுக்குத் தலைவணங்கிய பாண்டிய மன்னன்

சோழ நாட்டின் மீது படையெடுத்து சென்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த கோட்டைகள், மண்டபங்கள் எல்லாவற்றையும் அழித்து விடச்சொன்னவர், கரிகாற்சோழன் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசளித்த மண்டபத்தைப் பற்றி அறிந்ததும் அந்த மண்டபத்திற்குத் தலைவணங்கியிருக்கிறார். மேலும், தனது பட்டத்து யானையின் எடை அளவுக்குத் தங்கம், வைரம், வைடூரியம் போன்ற ஆபரணங்களை திருவரங்கம் கோவிலுக்கு துலாபாரம் வைத்துப் பரிசளித்துள்ளார். இந்தத் தகவல் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் கல்வெட்டில் இருக்கிறது. காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *