சென்னை வேறு மதராசப்பட்டினம் வேறு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். சென்னப்ப நாயகரின் மகன் வெங்கடபதி என்பவர் சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் 22.08.1639ம் நாள் விற்று விற்றுவிட்டார் என்கிறார்கள். இந்த நாளைத்தான் இன்று சென்னைதினம் என்று கொண்டாடுகிறார்கள்.
நமது மண்ணை வெள்ளைக்காரனிடம் விற்ற நாளைக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினமாகத்தான் இருக்கும். அது ஒருபுறம் இருக்கட்டும். சென்னை சில ஆண்டுகளுக்கு முன்னால் மதராஸாப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. மாதரசன் என்ற மீனவ மன்னன் ஆட்சி செய்ததால், அவரது பெயராலே அழைக்கப்பட்டது. அதற்கான வரலாற்று சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன. பெண்ணேஸ்வர மடம் என்ற ஊரில் 1367ம் ஆண்டு கம்பண்ண உடையாரால் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டில் மாதராசன் பட்டிணம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வரலாற்று சான்றுகளுடன் இருக்கும் மாதராசன் பட்டிணம் என்ற பெயரை விட்டு, தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயரை சென்னை என்று மாற்ற வேண்டிய தேவை என்ன? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.