இந்த இணையதளத்தில் மொழி, அரசியல், அறிவியல், மதம் மற்றும் பல பொதுவானக் கட்டுரைகளைப் படித்து மகிழலாம். என் உயிரின் வேர், தமிழில்தான் ஊன்றப்பட்டிருக்கிறது. ஆகையால், தமிழ் மற்றும் தமிழினம் சார்ந்த கருத்துக்களை பெரும்பாலான கட்டுரைகள் தழுவியிருக்கும். கட்டுரைகளைப் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுமாறுக் கேட்டுக் கொள்கிறேன். எந்தவிதமான சார்பும் இல்லாமல், வரலாற்றில் நடந்ததை அப்படியே நடுநிலையோடு கூறுவதே என் நோக்கம்.
மண்ணுலகில், மனதால் உயர்ந்தவர், அறிவில் சிறந்தவர், வணக்கத்துக்குரியவர், நான் வணங்கும் கடவுள் திருவள்ளுவர். இந்த உலகில் இதுவரை வாழ்ந்தவர், இனி பிறக்கப்போகிறவர் அனைவருமே திருவள்ளுவருக்குக் கீழானவர்கள்தான். ஆனால், விமர்சனம் என்று வந்துவிட்டால், திருவள்ளுவரும் விதிவிலக்கல்ல. ஆகையால், என் கட்டுரைகளில் விமர்சனங்கள் இயல்பாகவே இருக்கும். விமர்சனம் தவறென்றால் திருத்திக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். மாற்றுக்கருத்துக்களையும் மனமுவந்து வரவேற்கிறேன்.