Rajesh Lingadurai

உன் வாக்கு ஒன்றே மாறுதல்

வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு –

மேலும் படிக்க »

நான்

நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல்.  மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு.  ஐம்புலன்கள்

மேலும் படிக்க »

மேதகு

அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும்.

மேலும் படிக்க »

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு

மேலும் படிக்க »

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு

நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து

மேலும் படிக்க »

தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி  தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல்

மேலும் படிக்க »

ஏன் கடவுள்?

பெரியாரை விமர்சிப்போம்  கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம்

மேலும் படிக்க »

தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 1

வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம்

மேலும் படிக்க »

வாக்குத் தவறானால்?

தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம்.

மேலும் படிக்க »