சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை.
மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை.
ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை.
இந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.