அளந்து வைத்த உயரம்…
ஆர்ப்பரிக்கும் அழகு…
திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்…
இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்…
கண்ணைப் பறிக்கும் கைப்பேசி…
உள்ளம் கவரும் உடைகள்..
எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு…
நுனிநாக்கு ஆங்கிலம்…
இவர் மென்பொருள் பொறியாளர்…
பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான்.
இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.